புகையிரத சேவைகள் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பம் - புகையிரத திணைக்களம்

Published By: Gayathri

07 Oct, 2021 | 09:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படும்.

புகையிரதத்திற்குள் சமூக இடைவெளியை பேணவேண்டும் என்ற காரணத்தினால் அதிக புகையிரதங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அவர்மேலும்குறிப்பிடுகையில்,

நாடுதழுவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க தீர்மானித்திருந்தோம். 108 புகையிரத பயணங்களை சேவையில் ஈடுப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.

மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை இரண்டுவார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளதால் புகையிரத சேவையினை இரண்டுவார காலத்திற்கு ஆரம்பிக்க வேண்டாம் என கொவிட் ஒழிப்பு கட்டுப்பாட்டு குழு அறிவுறுத்தியது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும். மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை,நெடுந்தூர புகையிரத பயண சேவை ஆகியவற்றை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

குருநாகல், பாணந்துறை மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் அதிவேக புகையிரத சேவைகளை வழமைக்கு மாறாக அதிகரிக்கவும், காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01