கட்சி பேதங்களுக்கு அப்பால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 3

07 Oct, 2021 | 04:39 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகின்றது. இதனால் அவருக்கு போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சி பேதங்களுக்கு அப்பால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.  

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை  முன்வைத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற பொறுப்பு சபாநாயகராகிய உங்களுக்கு இருக்கின்றது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகின்றது.  இதனால் அவருக்கு போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தின் பிரகாரம் இரவு நேரத்தில் இரண்டு தடவைகள் மத வழிபாட்டில் (தொழுகையில்) ஈடுபடவேண்டும். ஆளுங்கட்சி எம்.பிகளும் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளில் இருந்து உணவுகள் கொண்டுவரப்படுகின்றன.

அரசியல் ரீதியாக வழக்கு தொடர்ந்தால் இதுவே நடக்கும். பொலிஸார் அரசாங்கத்தின் ஆலாேசனையின் பிரகாரம் செயற்படுகின்றனர். பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி ரிஷாதின் மைதுனரை கைது செய்து சிறையில் பல வாரங்கள் அடைத்து வைத்தார்கள். ஆனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரிஷாட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் ரீதியாக தொடரப்பட்டவை. எவ்வித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சரும் ஆளும் கட்சி கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,

லக்ஷ்மன் கிரியெல்ல இதுவரையில் சிறையில் அடைக்கப்படவில்லை. நான் கடந்த கால அரசாங்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். நாங்களும் போத்தலில்தான் சிறுநீர் கழித்தோம். எங்களது அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்ததாக சர்வதேசத்துக்கு  கிரியெல்ல செய்தி சொல்ல முயற்சிக்கிறார். அதனாலேயே முதலில் சிங்களத்திலும், பிறகு அதே விடயத்தை ஆங்கிலத்திலும் கூறுகிறார் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், ரிஷாத் பதியுதீன் தொடர்பில் வினவி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்று  இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தின்போது விளக்கமளிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56