(எம்.மனோசித்ரா)

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான அடிப்படை பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் எழுத்து மூலமாக வழிகாட்டல்கள் சுற்று நிரூபமாக வெளியிடப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மீண்டுமொரு முறை வாய்ப்பளிக்காத வகையில் செயற்பட்டால் தற்போது கொவிட் நிலைமையை மேலும் கட்டுப்படுத்த முடியும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.