எம்.மனோசித்ரா

ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித்  திட்டங்களின் முன்னேற்றம் இப்போது உயர் மட்டத்தில் உள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஒருங்கிணைந்த  வீதி  முதலீட்டு திட்டத்தின் முன்னேற்றம், 20 வீதமாக காணப்பட்டதோடு அது இன்று 80 வீதமாக வேகமாக அதிகரித்துள்ளது. 

அதே போன்று ஒருங்கிணைந்த  வீதி  முதலீட்டு திட்டத்தின்  கீழ் ஏனைய மாவட்டங்களில்  வீதி அபிவிருத்தியும் சிறந்த முன்னேற்றத்தை காண்பிக்கிறது.

வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக மக்கள் முன்வைக்கும்  கோரிக்கைகளை தாமதமின்றி  நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வீதிகளை அளவிடல்,   மதிப்பீடுகள் தயாரித்தல், கேள்வி மனு  கோரல் போன்றவற்றை தாமதமின்றி மேற்கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கைகளை மீறி வீதிகள் அமைப்பது தாமதமாகி வருவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

கொவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும்  அபிவிருத்திப்   பணிகள் தொடர வேண்டும் என்றும் மக்களின் கோரிக்கைகளை ஒருபோதும் மறுக்கக்கூடாது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.