ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பினால் இலங்கை விமானப்படைக்கு 02 தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு மருத்துவ அவசர ஊர்தி ( ஆம்புலன்ஸ்) வாகனமும் நன்கொடையாக வழங்கும் வைபவம் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பங்கேற்றுஇருந்தார் .

கலாநிதி லால் திலகரத்ன மற்றும் ஜப்பான் இலங்கை நட்பு வாரியம் போன்றவர்களின் அர்ப்பணிப்புடன் உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 தொற்றினால் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும் இந்த வாகனங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளனர்.

கொவிட் -19 தொற்று காரணமாக ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பின் அதிகாரிகளுக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. எனினும் நவீன தொழில்நுட்ப முறையினால் நேரடி ஒளிப்பரப்பின் மூலம் இந்த நிகழ்வை காணக்கூடியதாக அமைந்தது . 

இதன்போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் கலாநிதி லால் திலகரத்ன ஆகியோர் நேரடி வீடியோ தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடினர்.

 இதன்போது ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பினால் இலங்கை விமானப்படைக்கு இதுவரை காலமும் வழங்கிய உதவிகளுக்கும் தனது நன்றிகளை விமானப்படை தளபதி தெரிவித்தார்.