யுகதனவிய காஸ் விநியோக  அதிகாரம் அமெரிக்க நிறுவன வசமானமை தேசிய பாதுகாப்பிற்கு  பெரும் அச்சுறுத்தல் - கபீர் ஹாசிம்

Published By: Digital Desk 3

07 Oct, 2021 | 12:31 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கெரவலப்பிடிய மின்உற்பத்தி நிலையத்தின் காஸ் விநியோகித்தை பூரணமாக அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கி இருப்பது பிணைமுறி, சீனி மோசடிகளையும் விட பாரிய மோசடியாகும். அத்துடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுகதனவிய இயற்கை திரவ எரிவாயு நிலையத்தின் காஸ் விநியோகத்தை பூரணமாக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அரசாங்கம் இவ்வாறு இந்த நிறுவனத்துக்கு விநியோகிக்கும் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் பாரிய மோசடியை அரசாங்கம் செய்திருக்கின்றது.

இந்த மோசடி நாட்டில் இடம்பெற்ற பிணைமுறி, சீனி மோசடிகளைவிட பாரிய மாேசடியாகும். இவ்வாறு காஸ் விநியோகிக்கும் அதிகாரத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கி இருப்பது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும்.

மேலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய சில அதிகாரங்களை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கவேண்டும் என உதய கம்பன்பில அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

அதன் பிரகாரம் எரிபொருள் சுத்திரகரிப்பு நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்போகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

அதனால் எரிபொருள் சுத்திரகரிப்பு நடவடிக்கையை வெளிநாட்டுக்கு வழங்குவதா இல்லையா என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

அத்துடன் நாட்டின் பெற்றோலிய வளத்தை பெற்றுக்கொள்ள தேவையான சட்டங்களை ஏற்படுத்திக்கொள்ள அமைச்சர் உதய கம்பன்பில சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்திருக்கின்றார்.ஆனால் மன்னாரில் பெற்றோலிய அகழ்வுக்காக ஓமான் நாட்டுக்கு இரண்டு பிரிவுகளை வழங்கி இருக்கின்றது.

இவ்வாறு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியுடன் வளங்கள் செயற்பாட்டு நடவடிக்கையும் இடம்பெறவேண்டும். அந்த நடவடிக்கை இடம்பெறுவதற்கு முன்னர் எப்படி அதனை வழங்க தீர்மானிப்பது?

அதேபோன்று அமெரிக்க நிறுவனத்துடன் மேற்காெண்டிருக்கும் ஒப்பந்தத்தின் பிரகாரம், எமக்கு தேவைக்கு அப்பாலும் காஸை அந்த நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளவேண்டும். அதன் காரணமாக  எமது கோடிக்கணக்கான நிதி வீணாக விரயமாகும் அபாயம் இருக்கின்றது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40