நவராத்திரி விரதம்

Published By: Digital Desk 2

07 Oct, 2021 | 03:15 PM
image

கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான இம் மூன்று ஆற்றல்களின் அதிதேவதைகளான, துர்க்கை,லட்சுமி,சரஸ்வதி என முன்று சக்திகளை போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை தேவியைக் குறித்து நோற்கப்படும்  விரதமாகும். 

இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூஜிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி  மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

புரட்டாதி மாதத்தில் வளர்ப்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் வீரசக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க அருள்கின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அருள்கின்றான்.

இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

துர்க்கை,லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிர்களை கும்பங்களில் ஆவாகனம் செய்து ,ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள், நவராத்திரிக்கு பூஜைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், மலர்கள், இவைகளுடன் மா,பலா,வாழை போன்ற முக்கனிகளுடன், நெய் சேர்த்த அன்னம்,  வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். 

உலக வாழ் அனைத்து இந்துக்களால் இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தியாவில் வடநாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 

ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். 

இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலைப் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

நவராத்திரி விரத நியதிகள்,

புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும். வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும். விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று உபவாசம் இருந்து மறுநாள் விஜயதசமியன்று விரதம் விட வேண்டும். விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

முப்பெரும் தேவியர்களின் பூரண திருவருள் இந்நவராத்திரி நந்நாட்களில் இப்பூலகில் அனைவருக்கும் கிட்டுவதாக.

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22