பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 52 ஆவது போட்டி நேற்றிரவு அபுதாபியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு - கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் ஆர்மபமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை ஹைதராபாத்துக்கு வழங்கியது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத்தும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக ஜேசன் ராய் 44 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
142 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
அணி சார்பில் அதிகபடியாக தேவ்தூத் படிக்கல் 41 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இதேவேளை இன்று மாலை டுபாயில் நடைபெறும் 53 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம் இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமாகும் 54 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
Photo Credit ; IPL
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM