கே.பி.விவகாரம் : சிவப்பு அறிக்கையின்றி கைது செய்ய முடியாது.!

Published By: Robert

19 Sep, 2016 | 09:52 AM
image

விடு­தலைப் புலி­களின் உறுப்­பி­ன­ரான குமரன் பத்­ம­நா­தனை கைது செய்ய வேண்­டு­மாயின் இலங்கை, சர்­வ­தேச இன்­டர்போல் பொலி­ஸா­ருக்கு சிவப்பு அறிக்கை அனுப்ப தீர்­மா­னிக்கவேண்டும் என ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இது தொடர்பில் அந்த ஊடகம், இன்­டர்போல் அலு­வ­ல­கத்­திடம் தொடர்பு கொண்ட போது, எந்த நாட்­டிலும் உள்ள ஒரு தனி நபரை கைது செய்ய வேண்­டு­மாயின் முதலில் சிவப்பு அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என கூறி­யுள்­ளது.

முன்னாள் இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்­தியின் கொலை வழக்கு தொடர்­பாக இந்­தி­யா­வினால் கே.பி தேடப்­பட்டு வரு­கின்றார்.

இந்­தி­யாவில் உள்ள சட்­டத்தின் படி பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை மீறி­ய­தாக கே.பி மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஒரு நாட்டின் அங்­கீ­காரம் இல்­லாமல் எந்த ஒரு தனி நப­ரையும் கைது செய்ய முடி­யாது என இன்­டர்போல் ஊடகப் பேச்­சாளர் மேலும் கூறி­யுள்ளார்.

மேலும், குமரன் பத்­ம­நாதன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி மலே­சி­யாவில் வைத்து கைதுசெய்­யப்­பட்டு இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்டார்.

விடு­தலைப் புலி­களின் வெளி­நாட்டு வலை­ய­மைப்பை முறி­ய­டிக்க கடந்த அர­சாங்­கத்­துடன் கே.பி.செயற்­பட்டு வந்தார் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பின்னர் காவலில் இருந்த கே.பி கிளி­நொச்­சியில் இருந்­த­ப­டியே போரினால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான இல்லம் ஒன்றை நடத்தி வந்ததுடன் கடந்த அரசாங்கமும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச தளங்களில்...

2026-07-22 19:28:24
news-image

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்; மக்களுக்காக தொடர்ந்து குரல்...

2026-07-22 19:22:06
news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08