(எம்.மனோசித்ரா)
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 70 தொடக்கம் 90 மெற்றிக்தொன் திரவப் பெற்றோலிய வாயு உற்பத்தி செய்யப்படுவதுடன், அது நாட்டின் கேள்வியின் 5 சதவீதமாகும்.
அவ்வாறே, நாளொன்றுக்கு 10,000 பெரல்கள் இயலளவுடன் கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கும், தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கும் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த அபிவிருத்தி கருத்திட்டத்தை துரிதமாக மேற்கொள்வதற்குத் தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி திரவப் பெற்றோலிய வாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில் குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த கம்பனியொன்றை உருவாக்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM