(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநரான அமீர் அலெய்ஜிக்கின் பதவிக் காலம் நிறைவடைந்தாலும், அவர் இலங்கை தேசிய கால்பந்தாட்டத் துறையின் தொழிலுநுட்ப பணிப்பாளராக செயற்படுவார் என தெரிய வருகிறது.

2020 பெப்ரவரி மாதம் இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுநராக பொறுப்பேற்ற பொஸ்னிய நாட்டைச் சேர்ந்தவரான அமீர் அலெக்ஜிக்குக்கு 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியை அழைத்து செல்வதே  அவருக்கு வழங்கப்பட்ட இலக்காக இருந்தது.

இருப்பினும், நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைடுத்து, 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நுழைவது கடினமானதாக காணப்படுகிறது. 

இதனால், அமீர் ‍அலெய்ஜிக்குக்கு வழங்கப்பட்ட இலக்கை அவரால் அடைய முடியாது போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்காலம் முடிவடைந்ததும், குறித்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

எனினும், அவருக்கு இலங்கை தேசிய கால்பந்தாட்டத் துறையின் தொழில்நுட்ப பணிப்பளார் பதவி கிடைக்கும் எனவும் தெரியவருகிறது.