பண்டோரா ஆவணத்தில் மேற்கொள் காட்டப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் டலஸ் அழகப்பெரும இதனைக் கூறினார்.