நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மேலும் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் தற்சமயம் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் மொத்தம் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளது.