ராஜஸ்தானை தோற்கடித்து பிளே-ஆப் நுழைவுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ள மும்பை

Published By: Vishnu

06 Oct, 2021 | 08:03 AM
image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு சர்ஜாவில் நடைபெற்ற 51 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், ஓட்டங்களை குவிப்பதற்கு பதிலாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி பெற்றுக் கொண்ட குறைந்த அளவிலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் கூல்டர்-நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் மற்றும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

91 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை, 8.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 94 ஓட்டங்களை குவித்து வெற்றியை பதிவுசெய்தது.

ரோஹித் சர்மா 22 ஓட்டங்களுடனும், சூர்ய குமார் யாதவ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, ஆரம்ப வீரர்களுள் ஒருவராக களமிறங்கிய இஷான் கிஷான் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களுடனும், ஹர்த்திக் பாண்டியா 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை 12 புள்ளிகளை பெற்று, பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பிளே - ஆப் சுற்றுக்கு சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு அணிய அணிகள் ஏற்கனவே நுழைந்துள்ள நிலையில் நான்காவதாக நுழையும் அணி எது என்ற கேள்விக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.

இதேவேளை இன்றிரவு அபுதாபியில் ஆரம்பமாகும் 52 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit ; IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கொட்லாந்துக்கு எதிரான  மகளிர் ரி20 உலகக்...

2024-10-06 23:29:24
news-image

பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6...

2024-10-06 20:50:19
news-image

பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

2024-10-05 23:31:16
news-image

ஆஸி.யிடமும் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன்...

2024-10-05 20:40:58
news-image

அவுஸ்திரேலியாவுடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப்...

2024-10-05 21:45:40
news-image

இலங்கை - அவுஸ்திரேலியா மகளிர் ரி20...

2024-10-05 15:13:56
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் 18வயதின் கீழ்...

2024-10-04 19:15:40
news-image

பந்துவீச்சில் மிலாபா, துடுப்பாட்டத்தில் லோரா, தஸ்மின்...

2024-10-04 19:02:14
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2024-10-04 01:43:15
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 10...

2024-10-03 23:07:14
news-image

கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி....

2024-10-03 10:51:18
news-image

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில்...

2024-10-01 13:04:04