தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வழங்கி வைத்தார்.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், குற்றத் தடுப்பு மற்றும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரான அஜித் ரோஹண, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினராக கடந்து ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.