( எம்.எப்.எம்.பஸீர்)
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட - ஷ்ரவஸ்திபுர பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று பகல் வேளையில், பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த தாய், தனது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குழந்தையை கொலை செய்த பின்னர், குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிசார் கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இந் நிலையில் கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சரணடைந்த தாய் விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM