திருமலை எண்ணெய் குதங்கள் விவகாரம் - கம்மன்பிலவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் கபீர் ஹாசீம்

Published By: Digital Desk 4

05 Oct, 2021 | 09:52 PM
image

(நா.தனுஜா)

திருகோணமலை எண்ணெய் குதங்கள் கடந்த அரசாங்கத்தினால் இந்தியாவிற்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இதுகுறித்து என்னுடன் காலிமுகத்திடலில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கின்றேன். 

Articles Tagged Under: கபீர் ஹசீம் | Virakesari.lk

அவர் கூறுகின்ற இந்தக் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அங்கு நிரூபிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் அழைப்புவிடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அமைச்சர் உதய கம்மன்பில இருவகையான முகங்களை கொண்டிருப்பதுடன், அதில் மிகவும் நல்லவரைப்போன்ற சாந்தமான முகத்தை மாத்திரமே பொதுமக்களுக்குக் காண்பிக்கின்றார். ஓமானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடன் பெறுவதாகக்கூறிக்கொண்டு, மன்னாரின் எரிபொருள் தொகுதி இரண்டை ஓமானுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றிய செய்தியொன்று அரசாங்கத்திற்குச் சொந்தமான பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

எமது நாட்டுக்கு உரித்துடைய வளத்தை பிறிதொரு நாட்டிற்கு வழங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கின்றதா? இதுகுறித்து பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதா? இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற உதய கம்மன்பில, கடந்த அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை நிரந்தமாகவே இந்தியாவிற்கு வழங்கிவிட்டதாக முற்றிலும் பொய்யான கருத்தொன்றைக் கூறுகின்றார்.

இதுகுறித்து என்னுடன் காலிமுகத்திடலில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கின்றேன். அவர் கூறுகின்ற இந்தக் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அங்கு நிரூபிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன்.

2003 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி திருகோணமலைத்துறைமுகத்தின் மேற்தளத்தில் 13 எண்ணெய் குதங்களும் கீழ்த்தளத்தில் 85 எண்ணெய் குதங்களும் 35 வருடகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக எல்.ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

போர் இடம்பெற்றுவந்த அக்காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் அடிக்கடி இந்த எண்ணெய் தாங்கிகளை இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்துவதால் அதனைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இவ்வொப்பந்தத்தின் ஊடாக இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுவதாகக்கூறி நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மாத்திரமேயாகும்.

இருப்பினும் இதுகுறித்த பொய்யான தகவல்களைக்கூறி, நாட்டின் தேசிய வளங்களைப் பிறநாடுகளுக்கு வழங்குவதற்குத் தாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. அதுமாத்திரமன்றி இந்தியாவின் வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு வருகைதந்திருக்கின்றார். அதனூடாக மிகவும் சூட்சுமமான முறையில் திரைமறைவில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50