வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தினை மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று  திங்கட்கிழமை  காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரி.மங்க ளேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.