தேசிய கால்பந்தாட்ட அரங்கில் நேபாளத்திடம் தோல்வியடைந்த இலங்கை

Published By: Gayathri

05 Oct, 2021 | 05:41 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் நேபாள கால்பந்தாட்ட அணிக்கெதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 2க்கு 3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

மாலைத்தீவுகளின் மாலே நகரிலுள்ள தேசிய கால்பந்தாட்ட அரங்கில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி, நேபாள அணியை எதிர்த்தாடியது.

போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியிருந்தது. பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் விட்ட தவறுகளை  சரி செய்து இப்போட்டியில்  விளையாடியிருந்தனர்.

மறுமுனையில், நடப்புச் சம்பியனான மாலைத்தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்த நேபாள அணி ஆக்ரோஷமாக விளையாடி ‍இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணமிருந்தனர். 

இதன் பலனாக அந்த அணி போட்டியின்  30 ஆவது நிமிடத்தில் சுமன் லாமா கோல் நோக்கி அடித்த பந்து குறுக்கு கம்பந்தில் பட்டு மீண்டும் அவரிடம் வரவே, காலால் இலகுவாக தட்டிவிட்டு தமது அணிக்கு முதலாவது கோலை அடித்தார். 

இலங்கை வீரர்களான மார்வின் ஹெமில்டன், டிலொன் டி சில்வா, கவிந்து இஷான் ஆகியோர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடியவே முதற்பாதியில் நேபாள அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னர் போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பாகி சிறிது நேரத்தில், அதாவது போட்டியின் 51 நிமிடத்தில் நேபாள வீரர்களின் சிறந்த பந்து பரிமாற்றலால் மீண்டுமொரு ‍கோலை அந்த அணி போட்டது. 

இலங்கை கோல் எல்லை பெட்டிக்குள் வைத்து இம்முறை கோல் வலை நோக்கி அடித்த பந்தை  இலங்கை கோல் இலங்‍கை அணித்லைவரும் கோல் காப்பளருமான சுஜான் பெரேரா காலால் தடுத்தபோதிலும், அந்த பந்து அவரது கால் முட்டியில் பட்டு அருகே இருந்த நேபாள வீரரான அஞ்சான் பிஸ்தாவிடம் செல்லவே, அவர் அதனை கோலாக மாற்றினார். 

இதனால் நேபாள அணியினர், பயிற்றுநர் குழாம் மற்றும் அவ்வணியின் இரசிகர்கள் எல்லோருமே கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர். 

இதன் பிற்பாடு போட்டியின் 56 ஆவது நிமிடத்தில் மொஹமட் பசால் காலால் தட்டி விட்ட  பந்தை இலங்கையின் மார்வின் ஹெமில்டன் 25 மீற்றர் தூரத்திலிருந்து கோல் வலையை நோக்கி ஓங்கி உதைக்க அது கோலாக மாறியது. 

இதைனையடுத்து கோல் அடித்த உற்சாகத்தில் மேலுமொரு கோலொன்றை அடிக்க இலங்கை வீரர்கள் பெரிதும் முயற்சிகளை எடுத்த போதிலும் அவை கைகூடவில்லை. 

போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் ‍கொண்டிருக்கையில் போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் இலங்கையின் தடுப்பாளர்கள் இல்லாதமையை பயன்படுத்திக்கொண்டு மேலாக வந்த பந்தை இலாவகமாக நிறுத்திக்கொண்ட நேபாள வீரர் ஆயுஷ் கோல் அடித்து தமது அணியின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார். 

ஆட்டம் முடிந்து விட்டது என பலராலும் கணிக்கப்பட்ட இப்போட்டியின்  உபாதையீடு நேரத்தில் நேபாள கோல் எல்லை பெட்டிக்குள் வைத்து நேபாள வீரர்கள் மேற்கொண்ட தவறால் இலங்கைக்கு தண்ட உதை (பெனால்டி ) வாய்ப்பளிக்கப்பட்டது. 

இந்த வாய்ப்பை சாத்தியப்படுத்திக் கொண்ட இலங்கையின் டிலொன் டி சில்வா  கோல் வலையின் வலது பக்க கீழ் மூலைக்கு பந்தை அடித்து கோலாக மாற்றவே ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.  

இந்த உபாதையீடு நேரத்தின்போது இலங்கை அணி வீரர்கள் கோல் அடிப்பதற்க பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்தபோதும் அவை பலனளிக்கவில்லை. இறுதுயில் இலங்கை அணி 2க்கு 3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியானது இப்போட்டித் தொடரில் இலங்கை அடையும் 2 ஆவது தோல்வியாகும். மறுமுனையில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நேபாள அணி, புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களை இலகுவாக பிடிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58