இந்திய இழுவைப் படகு யாழ். குருநகர் மீனவர் படகு மீது மோதியதோடு படகில் இருந்தோர் மீதும் தாக்குதல்

Published By: Gayathri

05 Oct, 2021 | 05:39 PM
image

யாழ் .குருநகர் பகுதியில் இருந்து நேற்றையதினம் இரவு 12 மணியளவில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நிலையில், இந்திய மீனவர் படகால் மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம், இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை  கக்கடதீவு கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கக்கடதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் படகு இலங்கை மீன்பிடி  படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாக குருநகர் மீனவர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்களி ன்  குறித்த அத்துமீறல் சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம்  கண்டனம்  வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி  சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவை  படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்றொழில்  அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம். இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12