பெருந்தோட்டத்துறையில் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறும் நோக்குடன் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக பதாகைகள்  கையளிக்கப்பட்டன.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட் தொடர்பான பதாகைகளை கையளிக்கும் நிகழ்வு இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தில் நேற்று (4) இடம்பெற்றது.

இந்த திட்டத்திற்கு ரோட்டறிக்கழகம் அனுசாரணை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி, யுனிசெப் நிறுவன பிரதிநிதி, இராஜாங் அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.