ஹப்புத்தளைப் பகுதியில், கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொரியொன்று, விபத்துக்குள்ளாகியதில், லொரியின் சாரதியும், உதவியாளரும் படுங்காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (05-10-2021) ஹப்புத்தளைப் பகுதியின் வல்கவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்திற்குள்ளான லொரியில், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒன்பது பசுக்களும், ஏழு எருமை மாடுகளுமாக 16 கால்நடைகளையும், ஹப்புத்தளை பொலிசார் மீட்டனர்.

வெள்ளவாயாவிலிருந்து 16 கால்நடைகளையும் நுவரெலியாவிற்கு கொண்டு சென்றபோதே, குறிப்பிட்ட லொரி விபத்திற்குள்ளானது.

இறைச்சிக்காகவே, மேற்படி கால்நடைகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென்று பொலிசார் தெரிவித்த. ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.