காபூலில் பெண் ஆசிரியர்கள் பாடசாலைகளில் கற்பிக்க தடை

By Gayathri

05 Oct, 2021 | 04:41 PM
image

(ஏ.என்.ஐ)

காபூலில் உள்ள அனைத்து ஆண் மாணவர்கள் கற்கும் பள்ளிகளில் கற்பிக்கும் பெண் ஆசிரியர்களுக்கு தலிபான் தலைமையிலான கல்வி அமைச்சகத்தால் பணிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெண் ஆசிரியர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகியுள்ளது.

காபூலில் உள்ள குலாம் ஹைதர் கான் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த 33 ஆண்டுகளாக கற்பித்து வரும் அஸீசா என்ற ஆசிரியை இது குறித்து கூறுகையில், 

நான் 33 ஆண்டுகளாக கற்பித்து வருகின்றேன். இப்போது நான் ஒரு மாதகாலமாக வீட்டில் இருக்கின்றேன்.  என் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறேன். மறுப்புறம் பெண் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பெண் ஆசிரியர்கள் பணிக்குச் செல்ல தடை விதிப்பது கல்வி கற்பதில்  நிறைய பிரச்சினைகளை உருவாக்குகிறது என்று மாணவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர். 

ஒரு கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கிறோம். ஆண் ஆசிரியர்களால் அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்க முடிவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலிபான் தலைமையிலான தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தலிபான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் நூர் முகமது முத்தவாகில் குறிப்பிடுகையில், 

பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் கல்வி நடவடிக்கை பிரச்சினைகள் குறித்து கவனத்தில் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள்  மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ளதால் பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் , பயங்கரவாதக் குழு ஆட்சியின் கீழ் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று  குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04