6 பில்லியன் டொலர்களை இழந்த மார்க் சூகர்பெர்க்

By T. Saranya

05 Oct, 2021 | 03:48 PM
image

பேஸ்புக் நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் டொலரை இழந்துள்ளார்.

இலங்கை உள்பட பல நாடுகளில் நேற்று திங்கட்கிழமை மாலை வேளையில் திடீரென  சமூக ஊடகங்களான பேஸ்புக், வட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கின.

இதனால் குறித்த  சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது.  6 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. 

பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் டொலரை இழந்துள்ளார்.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் அதாவது 5 இடத்திற்கு தள்ளப்பட்டார்.

திங்கள் கிழமை மட்டும் பங்கு சந்தையில் 4.9 சதவீதம் அளவுக்கு பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

செப்டம்பர் பாதிக்குப் பிறகு அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. 

மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலரில் இருந்து 121.6 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right