இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஜனாதிபதியை சந்தித்தார்

Published By: T. Saranya

05 Oct, 2021 | 01:52 PM
image

இலங்கைக்கு  நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா  இன்று (05.10.2021) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த முக்கிய சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை நேற்று  சந்தித்திருந்தார்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை (2) இரவு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்று எண்ணெய் குதங்களையும் பார்வையிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

2023-03-22 19:09:26
news-image

டெலிகொம், லங்கா வைத்தியசாலையை தனியார் மயப்படுத்துவதன்...

2023-03-22 13:56:33
news-image

நிதி முகாமைத்துவம், பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கை...

2023-03-22 12:51:13
news-image

அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும்...

2023-03-22 15:49:11
news-image

இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவது...

2023-03-22 19:09:55
news-image

இலங்கையர் என்ற வகையில் ஜனாதிபதியை பாராட்டுகிறேன்...

2023-03-22 19:10:20
news-image

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த...

2023-03-22 15:19:47
news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47