முகத்துவாரம் மீன் பிடி துறைமுக விவகாரம் -ராஜித்தவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

Published By: Digital Desk 4

04 Oct, 2021 | 10:26 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக் குழு, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

ராஜித்த சேனாரத்ன சி.ஐ.டி.யினரால் கைது! | Virakesari.lk

 மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் இஸ்ஸதீன் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் அவ்வாண்டின் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முகத்துவாரம் மீன் பிடித் துறைமுகத்தை,  சீ கல்ப் யூ.கே. பிரைவட் லிமிடட் எனும் நிறுவனத்துக்கு குறைந்த வருமானத்துக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக  மீன் பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தை தூண்டியதன் ஊடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி,   இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 வழக்கில் ராஜித்த சேனாரத்னவுக்கு மேலதிகமாக  மீன் பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் அதிகாரிகளான  உபாலி லியனகே, நீல் ரவீந்ர முனசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27