ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் உண்மை காரணி அரசியல் நோக்கிற்காக மறைக்கப்படுகிறது - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Published By: Digital Desk 4

04 Oct, 2021 | 10:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது.

அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம், அரசியல் கொடுக்கல்வாங்கள் உள்ளிட்ட காரணிகளினால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டார்.

Articles Tagged Under: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை | Virakesari.lk

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன்றைய சூழ்நிலையில் பல பொதுப்பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் நடுத்தர மக்கள்பெரும் சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதனால் மாணவர்கள் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிள்ளைகளுக்கும்,பெற்றோருக்குமிடையில் இதனால் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

வீண்விரயமாக்கப்படும் அரச நிதியை கொண்டு பாடசாலைகளை திறக்க முடியும்.அதற்கான உரிய வழிமுறைகளும் உள்ளன.

இருப்பினும் இவ்விடயம் குறித்து அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை. இன்று நாட்டின் ஊழல் நிறைந்த நிர்வாக முறைமை தோற்றம்பெற்றுள்ளது. 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்கிறது.இதனால்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீதி தமக்கு ஏற்றாட்போல் மாற்றப்பட்டுள்ளது. இதனால்நீதி, நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாத சமூக முறைமை தற்போது தோற்றம்பெற்றுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் சட்டத்திற்கு புறம்பாகவே செயற்பட்டுள்ளன.இன்றும் இவ்வாறான நிலைமை இன்றும் காணப்படுகிறது.

சாதாரன நபர் நியாயத்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறை சமூகத்தில் உள்ளதா என்ற சந்தேகம்தோற்றம் பெற்றுள்ளது.

தேவையான விதத்தில் சட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் உள்ளார்கள்.இதனால் பெரும்பாலான நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வறுமை,ஏழ்மையை துரிதப்படுத்தும் வகையில் மாபியாக்கள் தற்போது அதிகம் தோற்றம் பெற்றுள்ளார்கள்.இவ்வாறான ஊழலையும், முறைக்கேடுகளையும் கட்டுப்படுத்த எவருக்கும்முடியாதுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்கதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக்கொள்ளும்வழிமுறை இல்லாமல் போயுள்ளது.

இவ்விடயத்தில்அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் ஆகியவை காரணமாக நீதியை பெறமுடியாதுள்ளது.அனைத்தையும் மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

குறுகிய நோக்கத்திற்காக மனசாட்சிக்கு விரோதமாக செயற்படகூடாது.அரசாங்கத்தின் தரப்பிலும்,ஆட்சியாளர்தரப்பிலும் இருந்துக் கொண்டு செயற்படவில்லை.மக்களுக்காகவே தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20