(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமான 13 ஹேக்கர் நிலப்பரப்பு சீனாவிற்கு விற்கப்படவில்லை. முதலீட்டுக்காக ஒப்பந்த அடிப்படையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாது என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்குகள் இந்தியாவின் அதானி குழுமத்திற்கும், 34 பங்குகள் ஜோன்கீல்ஸ் ஹோல்டிங் நிறுவத்திற்கும் 15 சதவீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் வழங்கப்பட்டுள்ளன.
35 வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 35வருட காலத்திற்கு பிறகு மேற்கு முனையத்தின் அனைத்து பங்குகளும் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாகும்.
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் அரசியல் பழிவாங்களினால் இடைநிறுத்தப்பட்டன.
தற்போது அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கும்போது விமர்சனங்களை மாத்திரம் எதிர்த்தரப்பினர் முன்வைக்கின்றனர். உலகில் விசாலமான கொள்கலன் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.
அத்துடன் 24ஆயிரம் கொள்கலன்களை சுமந்துக்கொண்டு நாளை பிறிதொரு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.
ஆசியாவின் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக சேவையில் கொழும்பு துறைமுகம் பிரதான கேந்திர மையமாக உள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் 2024ஆம் ஆண்டு இறுதி பகுதியில் முழுமையடையும். ஆகவே கொழும்பு துறைமுகம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
பாராளுமன்றில் உத்தியோகப்பூர்வமற்ற எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார். தற்போதைய நிலைமையினை அவதானித்தால் வெகுவிரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM