புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபரை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியமைக்காகவே, சம்பவம் இடம்பெற்றபோது கடமையில் இருந்த இரு பொலிஸாருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்டு புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த நபர் குற்றச் செயல் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றுக்கு அழைக்கபட்டிருந்தார். அவ்வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சமூகம் தராததால், நீதிமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கபட்டிருந்தது.
அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 28 வயதான ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் பொலிஸ் காவலில் இருந்த நிலையில் தனது மேற்சட்டையால் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்போது, சந்தேகநபரின் சடலம் புசல்லாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM