'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஸ்டுடியோ கிரீன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
நடிகர் ஜெயம் ரவி, நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கோமாளி'. இந்த திரைப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அந்த திரைப்படத்தில் ஓட்டோ ஓட்டும் சாரதியாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் ஸ்டுடியோ கிரீன் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தை இயக்குவதுடன் அதில் இவர் கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார்.
திரைப்பட இயக்குனர்கள் கதையின் நாயகனாக அறிமுகமாகி நடிப்பது என்பது தமிழ் திரையுலகில் புதிதல்ல என்றாலும், நட்சத்திர நடிகரை வைத்து முதல் படத்தை இயக்கி, வெற்றி கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை இயக்காமல், கதையின் நாயகனாக அறிமுகமாவது புதிது என்கிறார்கள் திரையுலகினர்.
இந்த பெயரிடப்படாத படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM