ஹரிகரன்
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின்நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (New Fortress Energy) நிறுவனத்துக்கு வழங்கும்உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கிறது அரசாங்கம்.
அவசரமாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டு, இரவோடுஇரவாக இந்த உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திட்டிருக்கிறது.
உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரே ஜனாதிபதி, அமெரிக்காவுக்குபுறப்பட்டுச் சென்றிருந்தார் என ஜே.வி.பி. தலைவர் அனுர குமார் திசநாயக்க தகவல் வெளியிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு,கச்சிதமாக இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கிறது அரசாங்கம்.
மன்னார் கடல் படுக்கையில் உள்ள எரிவாயு வளத்தைக் கொண்டு,கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை 150 ஆண்டுகளுக்கு இயக்கலாம் என்று கூறியிருந்த உதயகம்மன்பில, அந்த எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை அகழ்வதற்கான முதலீட்டாளர்களைத்தேடி மத்திய கிழக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தான், கெரவலப்பிட்டியமின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் கைமாற்றப்பட்டிருக்கின்றன.
இந்த திட்டத்தில், அமெரிக்க நிறுவனம், 250 மில்லியன் டொலர்கள்முதலீட்டைச் செய்திருக்கிறது.
இதன் மூலம் கெரவலப்பிட்டிய மின் நிலையத்துக்கான எரிவாயுவைவிநியோகிக்கும் கட்டமைப்புகளை அமெரிக்கா நிறுவனம் உருவாக்கவுள்ளது.
இந்த முதலீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகளையும் சந்தேகங்களையும்எழுப்புகின்ற அதேவேளை, ஆளும்கட்சிக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளே போர்க்கொடிஉயர்த்துகின்றன.
பொதுஜன பெரமுனவின் 10 பங்காளிக் கட்சிகளும் இந்த முதலீட்டைவிரும்பவில்லை. அதற்கு அவர்கள் இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-03#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM