கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் - 3 ஆவது நாளாக தொடரும் தேடுதல் பணிகள்

Published By: Digital Desk 4

04 Oct, 2021 | 04:22 PM
image

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் 02.09.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன்  வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இதன் போது கால் தவறி ஆற்றில் விழுந்த குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி பூண்டுலோயா பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19