நாட்டின் சிலப் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட வீதி ஒழுங்கு சட்டத்தை மீரிய 10 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலே மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 233 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் மாத்திரம் 42 ஆயிரத்து 768 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வீதி ஒழுங்கு சட்டம் கொழும்பு முழுவதும் கட்டாயம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.