Published by T. Saranya on 2021-10-04 16:35:11
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இருக்குமானால், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முன்னுக்கு செல்லவேண்டும்.
சாட்சியம் இல்லை என்றால் விடுவிக்கவேண்டும். அதனால் அவருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடுக்க முடியுமா முடியாதா என சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேட்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து வரப்பிரசாத கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.