இத்தாலியின் வடக்கு பகுதியில் மிலன் அருகே சிறிய தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Image

இந்த விபத்தில் 7 பயணிகளும் விமானியும் உயிரிழந்துள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலடஸ் பிசி -12 என்ற குறித்த விமானம், லோம்பார்ட் தலைநகரின் தென்கிழக்கில் சுமார் 30,000 மக்கள் வசிக்கும் சான் டொனாடோ மிலனீஸ் நகரில் அமைந்துள்ள யாரும் இல்லாத இரண்டு மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது விமானத்தில் சிறுவன் ஒருவன் உட்பட மொத்தம் எட்டு பேர் இருந்ததாக இத்தாலி செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தேசியத்தின் அடையாளத்தை உறுதி செய்ய தீயணைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.