நாட்டில் நேற்றை தினம் மொத்தமாக 13,431 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 1,056 தனிநபர்களுக்கும் அதன் இரண்டாவது டோஸ் 1,097 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 6,401 தனிநபர்களுக்கும் அதன் இரண்டாவது டோஸ் 4,291 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 440 தனிநபர்களுக்கும் அதன் இரண்டாவது டோஸ் 36 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 110 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 11,861,029 தனிநபர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.  அதே நேரத்தில் மொத்தமாக 26,441,235 தடுப்பூசி அளவுகள் நிர்வாகிக்கப்பட்டுள்ளன.

இதேவ‍ேளை இன்றைய தினம் 141 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

அது தவிர இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மொபைல் தடுப்பூசி மையங்களும் செலில் உள்ளன.

04.10.2021 செயலிலுள்ள தடுப்பூசி நிலையங்கள்