வரவு - செலவு திட்டத்திற்கு பின்னர் மாகாண சபை தேர்தல் குறித்து உறுதியான தீர்மானம் - ரொஷான் ரணசிங்க

By T. Saranya

04 Oct, 2021 | 11:30 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது. வரவு- செலவு திட்டத்திற்கு பின்னர் தேர்தல் முறைமை தொடர்பில் உறுதியான தீர்வை  பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் அபிலாசைகளையும் பெறுவது கட்டாயமானது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை  பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. கடந்த மார்ச்மாதம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை.கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம்  கொவிட் தொற்று நிலைமையை எதிர்க் கொண்டுள்ளோம்.

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில், நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதா என்ற பிரச்சினை காணப்படுகிறது. இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்தலாம், அத்துடன் எதிர்கால தேவைக்கு அமைய புதிய தேர்தல் முறைமையை திருத்தியமைக்கலாம் என  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தின் ஊடாக ஒரு தீர்வை காணுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் எதிர்வரம் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்னரே மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றில் ஒரு தீர்வு எட்டப்படும். தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளில் யோசனைகளையும் பெறுவது அவசியமாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  மாகாண சபை தேர்தல்  பிற்போடப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது தேர்தலை நடத்துவதற்கு சர்வதேச மட்டத்தில் அழுத்தம் பிரயோகிப்பது  பயனற்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34