ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதிக்கு வெளியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்தின் தாயார் நினைவேந்தல் நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தான் தலைநகரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் சமீபத்திய வாரங்களில் தலிபான்கள் மீது தாக்குதல்களை முடுக்கிவிட்ட இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் (ஐ.ஸ்.ஐ.ஸ்) மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் நுழைவாயிலில் சாலையோரம் ஏற்பட்ட வெடி குண்டு வெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காரி சயீத் கோஸ்தி உறுதிபடுத்தினார்.