ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையிலிருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் கட்டாரின் சிவப்பு நாடுகள் பட்டியலில் உள்ளன.

புதிய உத்தரவுகளின்படி பொது சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிவப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஒக்டோபர் 6 முதல் கட்டாருக்கு பயணிக்கலாம்.

எனினும் கட்டார் செல்லும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்(தடுப்பூசி போடாதவர்கள்) அவர்களுடைய பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அத்தகைய பயணிகள் கட்டார் வருவதற்கு முன்னர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த சோதனை முடிவுகள் கொவிட்-19 தொற்றுக்கு எதிர்மறையாக இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட ஹொட்டலில் கட்டார் வந்த 36 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும். 

எதிர்வரும் 6ம் திகதியிலிருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.