(ஆர்.யசி)

விசேட பாராளுமன்ற அமர்வுகள் நாளை திங்கட்கிழமை கூடவுள்ளதுடன், இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்பில் 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளைய தினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள பரிந்துரை | Virakesari.lk

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான  விசேட நாளாக நாளை திங்கட்கிழமை சபை அமர்வுகளை கூட்டுவதனால் நாளைய முழு நாளும் வாய்மூல கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 40 கேள்விகளுக்காக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 06ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

ஒக்டோபர் 07ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஒக்டோபர் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரையான நேரம் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும், புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழுக்கள் 

பாராளுமன்றத்தில் இரண்டு அமைச்சுசார்ஆலோசனைக் குழுக்களும் இரண்டு பாராளுமன்ற விசேடகுழுக்களும் கூடவுள்ளன.அதற்கமைய, இன்றுதொழில் அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் எதிர்வரும் 06 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளன. 

 இதேவேளை, தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ்உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு எதிர்வரும் 05 ஆம் திகதி கூடவுள்ளதுடன் தேர்தல்சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப்பொருத்தமான சீர்திருத்தங்களைஅடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப்பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுஎதிர்வரும் 07 மற்றும் 08 ஆகிய இரு தினங்களிலும்கூடவுள்ளது. 

மேலும் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு எதிர்வரும் 05 ஆம் திகதி கூடவுள்ளது.

 உரிய சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, தேவையான அதிகாரிகளை ஒன்லைன் ஊடாகவும்இணைத்துக்கொண்டு அடுத்தவாரம் பல பாராளுமன்றக்குழுக்கள் கூடவுள்ளன.