என்.கண்ணன்
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை தொடர்பாக எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு உடனடிப்பதில் கிடைக்கா விட்டாலும், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் நெருக்கடிகளும்அதிகரித்து வருகின்றமை வெளியிடப்பட்டுள்ளது
ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை சலுகை இழப்பு நாட்டுக்குப் பேரிழப்பாகஅமைவதுடன், அது தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆனாலும், கூட்டமைப்பின் வலியுறுத்தலானது, ஐரோப்பிய பாராளுமன்றத் தீர்மானத்தைவலுவானதாக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ்வரிச்சலுகையை நீடிப்பதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வந்துள்ள 5பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவின் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்தக் குழு அரசதரப்பு, எதிர்க்கட்சிகள், வர்த்தக பிரதிநிதிகள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்புகளையும் சந்தித்துப்பேசியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் இருந்தபோது,-2010ஆம் ஆண்டு மனிதஉரிமை காரணங்களால், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கை இழக்க நேரிட்டது,
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மங்கள சமரவீரஉள்ளிட்டவர்களின் கடும் முயற்சியினால் தான், அந்த சலுகை மீளக் கிடைத்திருந்தது.
27சர்வதேச பிரகடனங்களுக்கு இணக்கம் தெரிவித்தே அந்த சலுகை பெறப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சி தரப்பில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரதுஅணியினரும், வரிச் சலுகைகளை பெறுவதற்காக மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம்நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டது என்றும், 27 நிபந்தனைகளுக்குஇணங்கியிருப்பதாகவும் இந்த நிபந்தனைகள் ஆபத்தானவை என்றும் சிங்கள மக்களிடம்பிரசாரங்களை முன்னெடுத்தமை நினைவிருக்கலாம்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-03#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM