அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நாற்கர நாடுகளின் கூட்டம் (குவாட்) வெள்ளைமாளிகையில்கடந்த வாரம் இடம்பெற்றது. 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்று எட்டு மாதங்களுக்குபின்னர் வெள்ளை மாளிகையில் இக்கூட்டம் முதன்முதலாக நடைபெற்றது. 

கடந்த காலங்களில் நாற்கர நாடுகளின்கூட்டம் இடம்பெற்று வந்திருந்த போதும் இம்முறை போன்று மீள் உணர்வு பெற்ற நிலையை அதுகொண்டிருக்கவில்லை.  இதனைக் கூட்டத்தில் பங்குபற்றியதலைவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளமை முக்கிய விடயமாகும். 

இந்த வருட முடிவுக்கு முன்தாகவும்,அதனை தொடர்ந்து வரும் காலங்களிலும் மிக வலுவான பல மாற்றங்களை உலகம் காணவிருப்பதாக தெரிகிறது.

நாற்கர நாடுகளின் இந்தக் கூட்டதொடரில் முக்கிய கவனம் செலுத்திய விவகாரங்களில் முக்கியமாகவிருப்பது, தாரள ஜனநாயகமும்அதன்  விழுமியங்களுக்கான மதிப்பும் சர்வதேசஅளவில் தேய்ந்து போயுள்ளது என்பதாகும். 

அத்துடன், தாரள ஜனநாயகம் சர்வாதிகார அரசாங்கங்களால்அழுத்தத்திற்கு உள்ளாகி வரும் விவகாரமுமாகும். 

வளர்ந்து வரும் சீன, ரஷ்ய வல்லரசுகளின்ஆதிக்கமும் இதற்க மூல காரணமாக உள்ளது. அத்துடன் அவை சார்ந்த சிறிய நாடுகளின் நகர்வுகளின்மீதான கையாள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் உள்ளிட்ட விடயங்களும் இந்தக் கூட்டத்தொடரில்தீர்மானிக்கப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-10-03#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.