(எம்.ஆர்.எம்.வசீம்)
2022 அடுத்த வருடத்துகான வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றது.
அதன் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீடு சட்டமூலத்துக்கமைய அரசாங்கத்தின் மொத்த செலவு 2505.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 1776 பில்லியனுக்கும் அதிகம் புனர்நிர்மாண செலவாகும். இந்த வருடத்துக்கான செலவான 2538 பில்லியனுக்கு நிகராக அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் செலவு 33பில்லியன் ரூபாவாக குறைந்திருக்கின்றது.
மேலும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில் பொதுச் சேவைகளுக்காக மொத்தமாக 12.6பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கின்றது.
அதில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், நீதிமன்றம், பாராளுமன்றம், ஆணைக்குழுகள் உட்பட நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.
அத்துடன் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அதிககூடிய ஒதுக்கீடாக பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 18பில்லியன் ரூபாவால் அதிகரித்திருக்கின்றது.
இந்த வருடத்தில் பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது 355பில்லியன் ரூபா வாகும். அடுத்த வருடத்துக்கு 373 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு அடுத்தபடியாக அதிகம் ஒதுக்கப்பட்டிருப்பது அரச சேவை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்காகும்.
அது 286.7பில்லியனாகும். அதில் 286 பில்லியன் புனர்நிர்மாண செலவாகும். கல்வி அமைச்சுக்கு இந்த வருட செலவு தலைப்பில் 126.5பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் அடுத்த வருடத்துக்கு 127.6பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு 153.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6பில்லியன் வரை குறைவாகும். நிதி அமைச்சுக்காக 185.9பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 28பில்லியன் ரூபா அதிகமாகும்.
அடுத்தவருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை நிதி அமைச்சரால் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றது.
வரவு செலவு திட்டத்துகான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மாலை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM