குழந்தையின்மைக்கான காரணங் களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமானது பிரச்சனை இது. கருக்குழாய் அடைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதைக் கவனிக்க வேண்டிய அவசரமோ, அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய தேடலோ பலருக்கும் இல்லை. கருத்தரித்தலுக்கு உதவுவதுதான். இந்த கருக்குழாய்க்கள் 10 ஆயிரத்தில் 5 பெண்களுக்கு. இயற்கையிலேயே சினைக்குழாய் இல்லாமல் பிறக்கிறார்கள். ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டை யும் இணைந்து ஒரு சிசுவை உண்டாக்கும் முக்கிய பாலம் தான் சினைக்குழாய்கள்.

இரு சினைக்குழாய்கள் பெண்களின் கர்ப்பப்பையின் இடது, வலது என இரண்டு பக்கங்களிலும் 8 முதல் 10 செ.மீ நீளமுள்ள மெல்லிய குழாய்களாக இருக்கும். சினைக்குழாயின் ஒரு பக்கம் கர்ப்பப்பையினுள் திறந்த நிலையில் இருக்கும். மறுபக்கம் கருமுட்டைப்பையின் அருகில் இருக்கும். கர்ப்பப்பையிலிருந்து உள்வரும் ஆணின் உயிரணுக்களையும் கருமுட்டையையும் சினைக்குழாய்க்குள் எடுத்து கருத்தரிக்கும் சிசுவை 48 மணி நேரத்துக்குள் கர்ப்பப்பை அறைக்குள் சேர்த்து விடுகிறது. குழந்தையின்மைக்கான பிரதான காரணம் இந்தக் கருக்குழாய் அடைப்பு. கருக்குழாயில் கருத்தரிக்கும் சிசு, கருக்குழாயினுள் செல்ல இயலாமல் கருக் குழாயிலேயே தங்கி வளர்ச்சியடையவும் இது காரணமாகலாம்.

இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். குழந்தை இல்லாத பிரச்ச னைக்கு காரணமாக இருக்கும். அறியாத இயற்கையிலேயே அடைப்பு இருக்கலாம். கிருமிகள் அதிகம் தாக்குவதாலும், எஸ்.டி.டி. போன்ற வியாதிகளால் கிருமிகள் தாக்கி அதன் விளைவாக அடைப்பு ஏற்படலாம். குடும்ப கட்டுப்பாடு கருக்குழாய்களில் அடைப்பை உண்டாக்கும். குழந்தையில்லாத தம்பதியருக்குப் பரிந்துரைக்கப்படுகின்ற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்று கருக்குழாய் அடைப்பை ஸ்கேன், எக்ஸ்ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் கண்டுபிடிக்கலாம். சினைக் குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச் சைகளுக்கு டியூபோபிளாஸ்டி (Tuboplasty) எனப்பெயர். தற்போது ஃபாலோஸ்கோப்பி (Falloscopy) என்கிற குழாய்க்குள் செலுத்தி என்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதனுள் உள்ள சிலியா (Cilla) இயக்கத்தையும் (மைக்கேர மயிரிழைகள்) கண்டறியலாம்.

ஹைட்ரோ சால்பிங்ஸ் (Hydro salpinx) எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்களை மருந்து மூலமும், Salphingostomy எனப் படுகிற லேசர் மைக்ரே என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையிலும் குணப் படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம். (Cornual Block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீனமான ஹிஸ்டெரோஸ்கோப்பி (Hysteroscopy) வழியாக கருப்பையின் உள் செலுத்தி சரிபார்க்கலாம். (Hystero Scopic Cannulation) சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத நிலை யில், சோதனைக்குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்க முடியும்.

உலகில் முதன்முறையாக சோதனை குழாய் சிகிச்சை முறை, சினைக்குழாய் அடைப்புள்ள பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான சிகிச்சை, கணவன், மனைவி இருவரது அணுக்களையும் உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் சிசு உண்டாக்கி 2 முதல் 5 நாட்களுக்குள் கருவறைக்குள் நேரடியாக செலுத்தி. இயற்கையான குழந்தை போல் வளர்த்து பிரசவம் நிகழச் செய்கிற நிகழ்ச்சியாகும்.

எனவே ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால் பெரும்பாலும் சினைக் குழாய் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்த்து குழந்தை செல்வம் பெறலாம். நமக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்று வேதனைப்படுவதை விட அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை களைந்து விட்டால் குழந்தைப் பேறு நிச்சயம்.

டொக்டர். S. சந்திரலேகா,

M..D., D.G.O., MRCOG (London), ART (Singapore)

அலைேபசி எண் 0091 9842205194