ASUS   தனது புதிய மூன்று மடிக்கணினிகள் மற்றும் Desktop     மாதிரிகளை இலங்கையில் வெளியிட்டதோடு, நாட்டில் வணிக மற்றும் தொழில்சார் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும். இப் புதிய "ExpertSeries"ல், 4 புதிய மாதிரிகளில் ASUSExpertBook B1 (B1500CEA), ExpertBook B5 Flip (B5302FEA)  மற்றும் ExpertBookB9 (B9400CEA) laptops மேலும்ExpertCenterD7 Mini Tower (D700MA) desktop ஆகியவை உள்ளடங்கியுள்ளன. 

நாட்டின் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, இப்புதிய நான்கு மாதிரிகளும் சமீபத்தில் இணைய வழியாக அறிமுகப்படுத்தப்பட்டதோடு, ASUS  வல்லுநர்களிடமிருந்து இந்நான்கு மாதிரிகளின் முதல் அனுபவத்தைப் பெற்ற ஏராளமான ASUS  ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த இம் மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வு பெரும் வெற்றி பெற்றுள்ளமை விசேடம்சமாகும்.

 ASUS ExpertBook B1  - வணிக பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இது வணிக தொடக்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அளவுகளிலும் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கான சிறந்த தெரிவாக அமைகிறது.

உயர் செயற்திறன், military-grade  நிலைத்தன்மை மற்றும் விரிவான தனிப்பயனாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கி, மேம்பட்ட 11thGen Intel®Core™processor  மற்றும் NVIDIA® GeForce® discrete graphics  ஆகியவற்றையும் கொண்டுள்ளது, சக்திவாய்ந்த செயற்திறனுடைய 48GBmemory and capacious storage  வழங்குவதோடு, WiFi6     மற்றும் ASUSWiFi Master3  தொழில்நுட்பத்துடன் இது இடைவிடாத இணைப்பிற்கு முழுமையாக உதவுகிறது.

ASUSExpertBook B5 Flip  மடிக்கணினி வணிகத்தின் வெற்றிக்காக கட்டமைக்கப்பட்டதோர் மாதிரி என்பதோடு precision-crafted  மற்றும் minimalistchassis  இலகு தன்மையை தருகிறது மேலும் – 360° flippabledesign ஒப்பற்ற நெகிழ்வு தன்மையும் கொண்டுள்ளது. 11thGen Intel®Core™processor, AInoise cancellation மற்றும் dual-SSDRAID support, ASUSNumberPad 2.0  மற்றும் 14 மணிநேர பட்டரி ஆயுளுடன் கனரக பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் Fingerprint  சென்சார் மற்றும் TPM2.0 chip  உள்ளிட்ட உங்கள் தனியுரிமை மற்றும் வணிகத் தரவைப் பாதுகாக்கும் அம்சங்களுடன் இது நிரம்பியுள்ளது.

வெளியிடப்பட்ட மூன்றாவது மடிக்கணினி ASUSExpertBook B9  ஆகும், இது MagnesiumLithium Alloy எடன் நேர்த்தியாக, துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் minimalistchassis   வழங்குகிறது. 

இதன் நாள் முழுதுமான பட்டரி ஆயுளுடன் அதிஉச்ச பயன்பாட்டிற்காக கொண்டுள்ளது. மேலும் பயன்பட்டின் செயற்திறனை மேம்படுத்த பல அதிநவீன தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது. 11thGen Intel®Core™vPro®processor, AInoise cancellation, dual-SSD RAID support, ASUS NumberPad 2.0,  மற்றும் proximitysensor cldhd built-in IR web Camera     ஆகியவற்றையும் கொண்டுள்ளமை விசேடம்சமாகும்.

புதிய ASUS     மாடல்களில் புத்தாக்கமான ASUS     ExpertCenterD7 Mini Tower, உயர் தர Desktop  PC ஆகும், நிறுவன தர பாதுகாப்பு மற்றும் வணிகங்களிற்காகவே வடிவமைக்கப்பட்டதோடு, அனைத்து ASUS டெஸ்க்டாப்புகளும் உலகப் புகழ்பெற்ற ASUS   மதர்போர்டுகளைப் பயன்படுத்துகின்ற அதே நேரத்தில் ASUS ஆனது சந்தையில் உள்ள ஒரே டெஸ்க்டாப் விற்பனையாளராக 100% திடமான கொள்ளவுகளை தங்கள் மதர்போர்டுகளில் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். 

இதன் விளைவாக உயர்மட்ட MTBF மதிப்பீடு பெற்றுள்ளதோடு, D7Mini Towerன் கச்சிதமான, நவீன மற்றும் பல்துறை வடிவமைப்புடன் பல்வேறு பணியிடங்கள் மற்றும் தேவைகளுக்கு பயன்படுத்த கூடியதாக அமையும். 

மேலும் MIL-STD-810GUS military standards    மற்றும் மிகவும் விரிவாக்கக்கூடிய chassis  கொண்டுள்ளதோடு, இது நீண்ட கால பயன்பாட்டு உறுதியையும், தொழில் வல்லுநர்களுக்கு எளிதான எதிர்கால தொழில்நுட்ப மேம்படுத்தல்களையும் உறுதி செய்கிறது.

புதிய “Expertseries”     மாதிரிகள் ASUS     பங்காளர் வலையமைப்பின் மூலம் நாடு முழுவதும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தகவல்கள் மற்றும் ஆன்லைன் ஊடாக கொள்வனவு செய்ய, https://www.asus.com/lk/Business/Business-Where-to-buy/  பக்கத்தினைபார்வையிடவும்.