நாளை முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு  சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸின் வேகமான அதிகரிப்பு மற்றும் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் காரணாக கடந்த சில நாட்களாக சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

புதிய அனுமதிகளுக்கு இணங்க சிறைக் காவலில் உள்ள கைதிகளை வாரத்திற்கு ஒருமுறை மாத்திரம் பார்வையிடுவதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற கைதிகளை பார்வையிட ஒவ்வொரு மாதமும் ஒரு பார்வையாளர் அனுமதிக்கப்படுவார் என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.