அரச தரிசு நிலங்கள் நிறைய உண்டு இந்த விவசாய நிலத்தை கொரோனா சடலங்களை அடக்க ஒதுக்கியது அரசியல் தலைவர்களின் ஒரு சூழ்ச்சியே என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.
கொரோனாவினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்குவதற்காக கிண்ணியா வட்டமடுவில் காணி ஒதுக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு இன்று (02.10.2021) விஜயம் செய்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகளின் காணியை இவ்வாறு அடக்கஸ்தலத்துக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது பொருத்தமான இடமல்ல.சுமார் முப்பது வருட காலமாக விவசாய செய்கையில் ஈடுபடுகிறார்கள். அருகாமையில் உள்ள குளத்தை நம்பி விவசாய செய்கை பண்ணப்படுகிறது. இதில் பிரதேச செயலாளர் இணைந்து செயற்படுவது அரசியல் சூழ்ச்சியாகும்.
அடக்கஸ்தலங்களுக்கு இடம் தேவை தான் ஆனாலும் மக்கள் காணிகளை கையகப்படுத்தக்கூடாது .எவ்வளோ தரிசு நிலங்கள் இருந்த போதிலும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து காணியை கையகப்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM