நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 55 மரணங்களுடன் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,019 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 38 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இவர்களில் 15 பேர் 30 தொடக்கம் 59 வயதுடையவர்கள். இருவர் 30 வயதுக்கு குறைவானோராவர்.