தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'புஷ்பா படத்தின் முதல் பாகம்' வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'புஷ்பா'. இரண்டு பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தில் கதையின் நாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சுல்தான்' புகழ் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பகத் பாசில், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மிரோஸ்லவ் கூபா ப்ரோசே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில், 'புஷ்பா படத்தின் முதல் பாகம்' டிசம்பர் மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் ஆந்திர வனப்பகுதிகளில் செம்மர கடத்தலை மையப்படுத்தி ஆக்ஷன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM