அதானி குழுமத்திற்கு கொழும்பு துறைமுக பகுதியை வழங்கியமை நாட்டிற்கு பாரிய நட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி 

By Digital Desk 2

02 Oct, 2021 | 07:36 PM
image

நா.தனுஜா

'இந்தியாவின் அரசாங்கம்' என்று கருதப்படக்கூடிய அதானி குழுமத்திடம் கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு முனையம் வழங்கப்பட்டிருக்கின்றது.

உலகிலேயே பெருமளவு இலாபத்தைத் தரக்கூடிய மீள்ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியா வெகுவாக அவதானம் செலுத்திவருகின்ற சூழ்நிலையில், மிகமுக்கிய வாணிப கேந்திர நிலையமாக இருக்கின்ற கொழும்புத்துறைமுகத்தின் ஒருபகுதியை அதானி குழுமத்திற்கு வழங்கியிருப்பது நாட்டிற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 

அண்மையில் எமது சகாவான ரஞ்சன் ராமநாயக்கவை அங்குனுகொலபெலஸ சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டோம். அவர் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருந்திருந்தால் தற்போது அவருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைத்திருக்கும். 

ஆனால் அவர் எமது கட்சியைச்சேர்ந்தவராக இருப்பதனால் அந்த வாய்ப்பை இழந்திருக்கின்றார். எனவே அவர் இப்போது ஓர் 'அரசியல் கைதியாக' மாறியிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஏனையவர்களைப்போன்று ரஞ்சன் ராமநாயக்கவையும் சமத்துவமாக நடாத்துமாறும் அவரைப் பொதுமன்னிப்பின்கீழ் விடுவிக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

 

அடுத்ததாக எமது நாட்டைச்சேர்ந்த பாடகி யொஹானி ஒட்டுமொத்த உலக மக்களினதும் மனங்களைக் கவர்ந்திருக்கின்றார். இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது இசைநிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த கூட்டத்தைப் பார்க்கும்போது, அவர் அனைவராலும் விரும்பப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறு யொஹானி தனது பாடலினால் இந்தியாவைக் கைப்பற்றும்போது, மறுபுறம் அதானி ஒப்பந்தம் மூலம் இலங்கையைக் கைப்பற்றியிருக்கின்றார்.

 

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கடந்த காலத்தில் வெகுவாகப் பேசப்பட்டதுடன் இந்தியாவின் அதானி குழுமம் அதனைப் பெற்றுக்கொள்வதில் அதிக நாட்டத்தைக் காண்பித்துவந்தது. இருப்பினும் எதிர்க்கட்சி, தொழிற்சங்கங்கள், பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக கிழக்கு முனையம் காப்பாற்றப்பட்டாலும் மேற்கு முனையம் அதானி குழுமத்தின் வசமாகியிருக்கின்றது. 

கொழும்புத்துறைமுகத்தின் ஒருபகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 'இந்தியாவின் அரசாங்கம்' என்று கூறக்கூடிய அதானி குழுமத்திற்கு மற்றொரு பகுதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் துறைமுகங்களின் ஊடாக மீள்ஏற்றுமதி நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றன. 

இது உலகளாவிய ரீதியில் பெருமளவு இலாபத்தை ஈட்டித்தரக்கூடிய வணிகசெயற்பாடாகும். கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகங்களுக்கு இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. கொழும்புத்துறைமுகம் என்பது அதிக வருமானம் உழைப்பதற்கு வழிவகுக்கக்கூடிய வணிக ரீதியிலான முக்கிய கேந்திர நிலையமாக விளங்குகின்றது.

 

மறுபுறம் நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாத்தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற விடயம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது. நான்கு தேவாலயங்களை இலக்குவைத்து பயங்கரவாத்தாக்குதல் இடம்பெறலாம் என்று கடற்படையினர் அந்தந்த தேவாலயங்களுக்குச்சென்று எச்சரிக்கைவிடுத்திருந்தனர். பின்னர் அது தவறுதலாக இடம்பெற்றதெனக்கூறி மன்னிப்புக்கோரப்பட்டது. 

இத்தகைய ஒத்திகை நிகழ்வுகளுக்காக அப்பாவிப்பொதுமக்களைப் பயன்படுத்தவேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி உயிர்த்தஞாயிறுதினத்தாக்குதல் சூத்திரதாரிகளை அரசாங்கம் வெகுவிரைவில் வெளிப்படுத்தவேண்டும். அன்றேல் அரசாங்கம் ஒருபோதும் மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளமுடியாது என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம். 

அதுமாத்திரமன்றி நாமும் அமைதியாக இருக்கமாட்டோம். மாறாக சூத்திரதாரிகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தில் எமது உயிர்களைத் தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41